Thursday, September 27, 2012

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்–கணிணிக்குறிப்புக்கள்

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள் – கணிணிக்குறிப்புக்கள்


Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.

Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.

Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).

Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.

Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.

Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.

Ctrl+g: ஓரிடம் செல்ல.

Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட(Replace).

Ctrl+i:எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .

Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.

Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.

Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.

Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.

Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.

Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.






No comments:

Post a Comment